தரமான கேமிராவை பொருத்த வேண்டும் வங்கி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

தரமான கேமிராவை பொருத்த வேண்டும் வங்கி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்;

Update: 2025-01-19 14:12 GMT
பரமத்திவேலூர்,.19: பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளில் குற்ற செயல்கள் ஏற்படுவதை தடுக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ராமகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த அரசுடமை யாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த மேலா ளர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமத்திவேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட ர்கள் சீனிவாசன், ரவி ஆகியோர் கலந்து கொண்டு வங்கிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை முறையாக பராமரிக்கப்பட வேண்டும், தரமான கேமிராவை பொருத்த வேண்டும். கல்லாப்பெட்டி தெரியுமாறு கேமிராவை பொருத்த வேண்டும். கேமிரா இல்லாத இடத்தில் புதிய கேமிராக்கள் வைக்கப்பட வேண்டும். செயல்படாத கேமிராக்களை மாற்ற வேண்டும். நிறுவனத்தை பூட்டிவிட்டு செல்லும்போது கேமிரா செயல்படும் வகையில் இருக்க வேண்டும். இரவு, பகல் நேரங்களில் பாதுகாவலர்கள் பணியில் கட்டாயம் அமர்த்தப்பட வேண்டும். சந்தேகப்படும். நபர்கள் வங்கிக்கு வந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். மேலும் அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் போலீசாரின் செல்போன் எண் மற்றும் போலீஸ் நிலைய போன் எண் கொடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் பரமத்தி வேலூரில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசுடமையாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News