பரமத்திவேலூர் அருகே ஆறுமுக சுப்பிரமணிய சாமி கோவில் மகா கும்பாபிஷேகம்.

பரமத்திவேலூர் அருகே ஆறுமுக சுப்பிரமணிய சாமி கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.;

Update: 2025-01-20 14:30 GMT
பரமத்திவேலூர். ஜன.20: பரமத்திவேலூர் அருகே பிராந்தகம் கிராமத்தில் 34% அடி உயரமுள்ள ஆறுமுக சுப்பிரமணிய சாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாளையொட்டிகடந்த 17-ந் தேதி காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்த குடங்களுடன் யானை, குதிரை, பசு மற்றும் உடுக்கை, பம்பை நையாண்டி மேளம், கரகத்துடன், சூரிய பிறை சந்திர பிறைக ளோடு ஊர்வல மாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விநாயகர் வழிபாடுடன் வருண பூஜை. வாஸ்து சாந்தி, கும் பஸ்தானம், முதற் கால யாக பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 4 மணி முதல் 9 மணிக்குள் இரண்டாம் கால யாக பூஜை, நாடிசந்தானம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடு. யாத்திரா தானம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு 34 1/2 அடி உயரமுள்ள ஆறுமுக சுப்பிரமணிய சாமி' கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மூலவர் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான சாமி ஏற்பாடுகளை பிராந்தகம் ஆறுமுக சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகிகள், காவடிக்குழுவினர் சஷ்டி, கிருத்திகை கட்டளை தாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்

Similar News