உதகையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து மற்றும் நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது
உதகையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து மற்றும் நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது;
உதகையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து மற்றும் நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு தீயில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.... நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு காவல்த்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று உதகையில் உள்ள மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் உதகையில் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு தீயில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் வாகனங்களில் தீ பிடித்தால் அதனை எவ்வாறு அணைப்பது உள்ளிட்ட பல்வேறு செய்முறை விளக்கங்களை செய்து காட்டினர். இதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர், வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பாக இயக்க வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும், தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும், சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில் 100க்கும் மேற்ப்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.