ஆரணி ஒன்றிய அளவிலான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு பள்ளியில் ஆரணி ஒன்றிய அளவிலான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணம் எழுத்தும் பயிற்சி நடைபெற்றதில் மேற்பார்வையிட்ட செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் சி.வீரமணி.;
ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு பள்ளியில் ஆரணி ஒன்றிய அளவிலான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணம் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. ஆரணி வட்டார வள மையம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் இணைந்து ஆரணி ஒன்றிய அளவிலான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி (பருவம்-3) நடைபெற்றது. இதில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) சி.வீரமணி, திருவண்ணாமலை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சத்யா ஆகியோர் மேற்பார்வையிட்டனர். மேலும் இதில் ஆரணி வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்.கமலக்கண்ணன், பி.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தாளர்களாக ஏழுமலை, நாராயணன், மகேஸ்வரி, ரேகா, இந்திரா, ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரியப்பயிற்றுநர்கள் வடிவேலன், அய்யாசாமி, சீனிவாசன், மணிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி ஆரணி வட்டாரத்தில் உள்ள 91 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆரணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயசீலி செய்திருந்தார்.