நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்
108 ஆம்புலன்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், முதலுதவி பயிற்சி மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் நேற்று நடைபெற்றது. நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.பாரதிராஜா, அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர் கே.சரண்யா, ஆர்.சந்திரபோஸ் ஆகியோர் விபத்து தொடர்பாக அளிக்கப்படும் முதலுதவி குறித்த செயல் விளக்கத்துடன் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நேர்முக உதவியாளர் காஞ்சனா, கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் அலுவலக ஊழியர்கள், நாகை ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், இருசக்கர வாகன முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.