பாண்டமங்கலத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்.

பாண்டமங்கலத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் தமிழக அரசின் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பேச்சு.

Update: 2025-01-22 14:27 GMT
பரமத்தி வேலூர், ஜன. 22: பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எம்.ஜி.ஆரின் 108- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு பரமத்திவேலூர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். நகர செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கழக கொடியை ஏற்றி வைத்து  எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசியதாவது:- எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவி அவர் மக்களுக்காக ஆற்றிய பணிகள் குறித்து புகழாரம் சூட்டினார். பின்னர் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சாதனைகள் குறித்து பட்டியலிட்டார்.  தி.மு.கவின் ஆட்சிக்காலம் முடிய இன்னும் 13 அமாவாசைகளே உள்ளது 14- வது அமாவாசையில் புரட்சித் எடப்பாடியாரின்  பொற்கால ஆட்சி மீண்டும் தொடரும். தமிழகத்தில்  சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்காக எந்த ஒரு நலத்திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க தவறிவிட்டது. மின்சார கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் ஆகியவை மட்டுமே திமுகவின் சாதனையாக உள்ளது என பேசினார். விழாவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரவி, வெற்றிவேல், நகர செயலாளர் கள் நாராயணன், வேலுச்சாமி,  சுகுமார், ரவீந்திரன் உள்ளிட்ட ஒன்றிய கழக கிளைக் கழக மகளிர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News