சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கல்லூரி மாணவர் போக்சோவில் கைது.
சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
பரமத்திவேலூர், ஜன. 24: மோகனூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதே கல்லூரியில் சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல் (வயது 20) மைக்ரோ பயாலஜி படித்து வந்தார். இவரும், அந்த சிறுமியும் நண்பர்களாக பழகி பின்னர் காதலர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சக்திவேல் சமூக வலைத்தளத் தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள் ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிந்து சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.