தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2025-01-25 15:02 GMT
பரமத்தி வேலூர், ஜன. 25: தமிழ்நாடு தொ.டக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமத்தி வேலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பரமத்தி அமிர்தவல்லி வரவேற்பு உரையாற்றினார். ஒன்றிய தலைவர் மணிவண்ணன்,ஒன்றிய செயலாளர் சந்திரகாந்தா,ஒன்றிய பொருளாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டக் கோரிக்கை உரையை மாவட்ட செயலாளர் சங்கர் வாசித்தார். ஆர்ப்பாட்டப் பேருரையை மாநில பொருளாளர் முருக செல்வராசன் வாசித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை முற்றாக ரத்து செய்தல் வேண்டும், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதி திட்டத்தினை முற்றிலுமாக நிராகரித்தல் வேண்டும், வரையறுக்கப்பட்ட பயன் தரும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை 01.04.2003 முதல் தொடர்ந்து அமல்படுத்திட வேண்டும், ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசாங்க விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.

Similar News