நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் பார்த்திபன் தகவல்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று ஆரணி ஏசிஎஸ்மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழாவிற்கு சனிக்கிழமை இரவு வந்திருந்த நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறினார்;
ஆரணியில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று ஆரணி ஏசிஎஸ்மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழாவிற்கு சனிக்கிழமை இரவு வந்திருந்த நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் செய்தியாளர்களிடம் கூறியது, நான் 16 திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். 72 திரைப்படங்களில் நடித்துள்ளேன். வெற்றிகளையும் சந்தித்துள்ளேன். பல தோலவிகளையும் சந்தித்துள்ளேன்,. ஆனால் நான் தோல்வியை கண்டு துவண்டு விடுவதில்லை. நான் இதுவரை 3 தேசிய திரைப்பட விருதினையம், தமிழ்நாடு மாநில விருதுகளையும் பெற்றுள்ளேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் இதனை வரவேற்கிறேன்.மேலும் அவர் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். அரசியலில் பல தடைகள் வரும் ஆளுங்கட்சி தடை, மற்ற கட்சியினர் வரவிடமல் வளரவிடமல் தடுக்க பல வேலைகள் செய்வார்கள். பல தடைகள் வந்தே தீரும் அதையெல்லாம் உடைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் ஒரு சிட்டிசன் என்ற முறையில் கூறுகிறேன். அதற்காக விஜய் என்னை கட்சிக்கு அழைத்தால் செல்லமாட்டேன். அரசியலுக்கு பலர் வருவார்கள், செல்வார்கள். ஆனால் ஏதாவது ஒரு புரட்சி வெடித்தால்தான அந்த அரசியல்வாதி வெற்றி பெறமுடிகிறது. அதுபோல்தான் விஜய் அரசியலும், நான் தன்னிறைவு அடைந்த பின்புதான் அரசியலுக்கு வருவேன் இவ்வாறு செய்தியாளர்களிடம் பார்த்திபன் பேசினார். அப்போது உடன் ஏசிஎஸ் கல்வி குழும நிறுவனர் ஏ.சி.சண்முகம், நிர்வாக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.