கிராம உதவியாளர்களை கிராம பணியில் மட்டும் பயன்படுத்த வேண்டும்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
அரியலூர், ஜன.24- தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் .வட்டாரத் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.. மாவட்ட செயலாளர் மதியழகன், மாவட்டத் தலைவர் காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தொடர் கோரிக்கையான கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் கிராம உதவியாளர்களை அரசு ஊழியர்களின் பட்டியலில் டி பிரிவில் சேர்க்க வேண்டும். கிராம உதவியாளர்கள் இறந்து விட்டால் வழங்கி வந்த வாரிசு வேலையை மீண்டும் வழங்க வேண்டும். கடந்த 2007ம் ஆண்டிற்கு பிறகு சி பி எஸ் திட்டத்தில் பணி செய்து ஓய்வு பெற்று இறந்து போன கிராம உதவியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் அரசு பங்கிட்டுத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் என் தற்காலிகமாக வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது நிரந்தர சிபிஎஸ்என் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை கிராம பணியில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தவிர பல்வேறு மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மாற்றுப் பணிக்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அஞ்சம்மாள், விஜயலட்சுமி, கோவிந்தராஜ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வட்ட பொருளாளர் கலையரசி வரவேற்றார். முடிவில் வட்ட செயலாளர் அகிலா நன்றி தெரிவித்தார்.