தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போருக்கு இட உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார பயணம்
தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போருக்கு இட உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டனர்.;
அரியலூர், ஜன.26- தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போருக்கு இட உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளனர் தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டைப்பை சார்ந்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு பகுதியில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்றனர் ஜெயங்கொண்டம் வருகை தந்த கோவில் மனையில் குடியிருப்போர் நல சங்க தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் நலச்சங்கர் மாநில பொருளாளர் ஏழுமலை மற்றும் மாநில நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் பிரச்சார பயணத்தை தொடங்கி இருக்கிறோம் தொடர்ந்து வரிசையாக வருகின்ற போது ,ஜெயங்கொண்டம் பகுதி மக்களோடு ஆதரவை நாங்கள் திரட்டி கொண்டிருக்கிறோம் எங்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கை தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர்களுக்கு பகுதி என்ற நடைமுறை இருந்தது கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு சதுர அடி கணக்கில் போட்டு அதிகாரத்தை வழங்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது குடியிருப்பவருடைய அதிகாரம் பறிக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு மீண்டும் பகுதி முறையை இந்த அரசு கொண்டுவர வேண்டும், பகுதி முறை இருந்தால்தான் குடியிருப்பு வாசிகளுக்கு உரிமை கிடைக்கும் ஆத்திர அவசரத்துக்கு எங்களுடைய இடத்தை வங்கியில் வைத்து கடன் வாங்க முடியும், அதேபோல பிள்ளைகளுடைய திருமணத்திற்கு நல்லது கெட்டது எல்லாம் பல்வேறு உரிமைகள் கொண்டாட முடியும் இன்றைக்கு நாம் சதுர அடி கணக்கில் எங்களிடத்தில் வாடகை வாங்குவதால் எங்களுடைய உரிமை இந்த அரசால் பறிக்கப்படுகிறது. அந்த பறிக்கப்படுகின்ற உரிமையை மீட்டெடுக்கவே நாங்கள் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். எங்களுக்கு வாடகை குறைக்கப்பட வேண்டும், பகுதி என்ற முறையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இதை செய்தால் டாக்டர் கலைஞர் அவர்கள் முன்னெடுக்கப்பட்ட காரியத்தை இன்றைக்கு தமிழ் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் அவங்க அப்பாவுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் அதை தொடர்ந்து வரக்கூடிய நமது மதிப்பிற்கும் மரியாதைக்குரிய துணை முதல்வர் அவர்களும் தாத்தா செய்த காரியத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஆனால் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பேன் என்று சொல்லக்கூடிய கலைஞருடைய ஆட்சி, அண்ணா உடைய ஆட்சி அதை நடைமுறைப்படுத்தினால் உண்மையிலேயே ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். எங்களுக்கு வாடகை என்பதை ரத்து செய்து, எங்களுக்கு பகுதி என்ற முறையை உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை தொட்டு நாங்கள் தொடர்ந்து சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கிறோம். அதற்கு பொது மக்களுடைய ஆதரவை திரட்டுவதற்காக தான் நாங்கள் வந்திருக்கிறோம், அடுத்து மார்ச் மாதத்தில் தமிழகத்தினுடைய மூலை முடுக்கெல்லாம் இருக்கக்கூடிய குடியிருப்பு வாசிகளை திரட்டி கோட்டை நோக்கி எங்களுடைய பயணம் செல்ல இருக்கிறது.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமநாதன், மற்றும் நிர்வாகிகள் ராஜாராம்,காத்தவராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் வளரும் கலந்து கொண்டனர்.