திருமானூரில் சிறப்பாக பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு
திருமானூரில் சிறப்பாக பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் இளங்கோவிற்கு மாவட்ட கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.;
அரியலூர், ஜன.26- அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 202 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை முறையாக தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு கொண்டு சென்றதற்காகவும், கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொண்டதற்காகவும் கூறி திருமானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் இளங்கோவின் பணியை பாராட்டி கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ---------