அத்திமரப்பட்டியை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஜெ.ப.பிரபாகருக்கு குடியரசுத் தலைவர் விருது
அத்திமரப்பட்டியை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஜெ.ப.பிரபாகருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;
அத்திமரப்பட்டியை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஜெ.ப.பிரபாகருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காவல்துறையில் சிறந்த சேவைக்கான ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள் மற்றும் 95 பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த காவல் கமாண்டோ கண்காணிப்பாளர் ஜெ.ப.பிரபாகர் உள்ளிட்ட 21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வீர, தீர செயலுக்கான விருது ஜஜி துரைக்குமார் மற்றும் ராதிகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் விருது பெறும் ஜெ.ப.பிரபாகர் தூத்துக்குடி அருகில் உள்ள அத்திமரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். சென்னையில் கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றும் இவர், அத்திமரப்பட்டியில் ஆரம்பக் கல்வி பயின்று, மேற்படிப்பை தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியிலும், பட்டப் படிப்பை காமராஜ் கல்லூரியிலும் படித்து முடித்தார். அதனை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சியின் போதே 3 தங்க பதக்கங்களை வென்றார். இவருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அத்திமரப்பட்டி பகுதி பொதுமக்கள் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.