தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜெயங்கொண்டத்தில் உள்ள தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.
தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜெயங்கொண்டத்தில் உள்ள தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
அரியலூர், ஜன.27 - தமிழக வெற்றி கழகம் சார்பில் அரியலூர் மாவட்ட செயலாளராக சிவக்குமார் நியமிக்கப்பட்டார் இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் இந்நிலையில் ஜெயங்கொண்டம் வருகை தந்த மாவட்ட செயலாளருக்கு கட்சியினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்பு ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கர் பெரியார் அறிஞர் அண்ணா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல உடன் இருந்தனர்.