கோயிலில் திருடியவரை விரட்டி பிடித்த புழல் பெண் காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்
சோழவரத்தில் கோயிலில் திருடியவரை விரட்டி பிடித்த புழல் பெண் காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்;
சோழவரத்தில் கோயிலில் திருடியவரை விரட்டி பிடித்த புழல் பெண் காவலருக்கு குவியும் பாராட்டுக்கள். செங்குன்றம் அருகே உள்ள சோழவரம் எல்லையம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற பாபு என்ற நபரை அருகில் இருந்த கடையில் பொருட்களை வாங்க வந்த புழல் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் பேபி சகிலா கோவிலில் திருடுவதை கண்டதும் அவரை பிடிக்க முயன்றார் அப்போது அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார் விடாமல் அவரை துரத்திய பெண் காவலர் பேபி சகிலா பிடித்து சோழவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அவர் மீது வழக்கு பதிவு செய்த சோழவரம் போலீசார் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்