பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 10சவரன் நகை, ரூபாய் 1.30 லட்சம் ரொக்கம் திருட்டு. போலீஸ் விசாரணை;
செங்குன்றம் அருகே பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 10சவரன் நகை, ரூபாய் 1.30 லட்சம் ரொக்கம் திருட்டு. போலீஸ் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சாமியார்மடம் பகுதியை சேர்ந்தவர் பூ வியாபாரியான மூதாட்டி அம்சவல்லி. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமது வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை நெற்குன்றத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தார். காலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பூ வியாபாரியான மூதாட்டி அம்சவல்லி அளித்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.