உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் இரண்டு சேய் உயிர்களை காக்கும் முயற்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செயல் இணையதளத்தில் வைரல்!*
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் இரண்டு சேய் உயிர்களை காக்கும் முயற்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செயல் இணையதளத்தில் வைரல்!*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் இரண்டு சேய் உயிர்களை காக்கும் முயற்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செயல் இணையதளத்தில் வைரல்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசியில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்த தாய் மற்றும் இரு குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் நோக்கில் ராஜபாளையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்த செயல் இணையதளத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் தென்காசி சக்தி நகரில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் அவர்களது உயிர் காக்கும் பொருட்டு அடுத்த கட்ட மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முடிவான நிலையில் . அவர்களது உயிர்களை காக்கும் பொருட்டு மதுரைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ராஜபாளையம் ஆம்புலன்ஸ் நண்பர்களிடம் போக்குவரத்தை சரி செய்து கொடுக்குமாறு உதவி கோரியுள்ளனர். சாதாரண நேரங்களில் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் ராஜபாளையத்தை கடக்க 25 நிமிடங்கள் ஆகும் நிலையில் தாய் சேய் உயிர் காக்கும் பொருட்டு ராஜபாளையம் காவல்துறையுடன் இணைந்து விரைந்து செயல்பட்ட ராஜபாளையம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட தாய் சேய் மூவரின் ஆம்புலன்ஸ்களை உயிர்காக்கும் பொருட்டு போக்குவரத்து நெரிசல்களை சரி செய்து சுமார் ஆறு நிமிடங்களுக்குள் ராஜபாளையத்தில் இருந்து கிருஷ்ணன் கோவில் வரை எவ்வித போக்குவரத்து நெரிசல்களில் சிக்காதவாறு பாதுகாப்புடன் வழியனுப்பி வைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாவது மட்டுமின்றி காண்போர் நெஞ்சில் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.