கல்லூரியில் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

கல்லூரியில் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்;

Update: 2025-01-28 15:51 GMT
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கல்லூரியில் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 75 பேர் பணி செய்து வருகின்றனர். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கிட உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அதனை வழங்க கோரியும் உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் பணியாற்றும் 75 ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தரக் கோரியும் ஒரு நாள் அடையாளம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கல்லூரி வாயிலின் முன்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தமிழக அரசு தங்களுக்கு பணிநிரந்தம் வழங்க கோரியும் ஊதிய உயர்வு கேட்டும் கோஷங்களை எழுப்பினர்.

Similar News