பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு.
பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
பரமத்தி வேலூர், ஜன.29: பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக் கல்பாளையம், அண்ணாநகர், பாண்ட மங்கலம், பொத்தனூர், வேலூர், அணிச்சம்பாளையம், நன்செய் இடை யாறு, பாலப்பட்டி மோக னூர் மற்றும் அதனை சார்ந்த பகுதி களில் ஆயிரத் துக்கும் அதிகமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் வாழைத் தார்களை வியாபாரிகள் வாழைத் தோப்பில் இருந்து நேரடியாக கொள் முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் தை அமாவாசை என்பதால் பரமத்திவேலூர் வாழைத் தார் மார்க்கெட்டிற்கு 2000 திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற் பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந் திருந்தனர். ஏலம் தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக காணப்பட்ட நிலையில் பூவன் வாழைத்தார்களின் விலை இருமடங்காக உயர்ந்து ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் வாழைத்தார் மார்கெட்டில் பூவன் வாழைத்தார் ஒன்றிற்கு ரூ.500 முதல் ரூ.700 வரை விலை உயர்ந்து விற்பனையானது. இந்த விலை யேற்றத்துக்கு காரணம் தை மாதம் அமாவாசை என்பதால் விலை உயர்ந் துள்ளது என வியாபாரிகள் தெரிவித் தனர். வாழைத்தார்களின் விலை கடந்த வாரத்தை விட நேற்று நடந்த விபரம் இருமடங்காக அதிகரித்திருப்பது வாழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.