அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்;

மொரப்பாக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டம் வழங்க கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொரப்பாக்கம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்ட பணிகள் வழங்கவில்லை எனக் கூறி அக்கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மதுராந்தகம் உத்திரமேரூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.