நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை செல்லக்கூடிய மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது...
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை செல்லக்கூடிய மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது...;
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை செல்லக்கூடிய மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது... மஞ்சூரிலிருந்து கோவை செல்லக்கூடிய இந்த மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் முகாமிட்டுள்ளது இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் மட்டுமின்றி மலைப்பாதையில் பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து வரும் யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு கெத்தை மலைப்பாதையில் ஒற்றைக் காட்டு யானை நடமாடியது இதனால் அச்சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்தாச்சம் அடைந்தனர் முகப்பு வெளிச்சத்தை கண்டும் காட்டு யானை வாகனங்களை நோக்கி நடந்து வந்தது இதனால் வாகனங்களை பின்னோக்கி எடுத்து யானையிடமிருந்து வாகன ஓட்டிகள் தப்பித்தனர் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு மலைப்பாதையில் பயணிக்கும் பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து வழிமறைத்த காட்டு யானைகள் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே நின்றதால் அரசு பேருந்தில் பயணித்த பொதுமக்கள் அச்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.