பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை அதிகாலை முதல் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிக கடுமையான பாதிக்கப்பட்டனர்.கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் இருந்து காலை 9 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சாலைகளே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டது எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கி சென்றனர்.காலை 9 மணிக்கு மேல் வெயில் அடித்ததும் வாகன ஓட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.