பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்

ஒழுங்கு முறை;

Update: 2025-02-06 13:28 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் மா.சரசு தலைமை வகித்தார். கும்பகோணம் வேளாண் வணிகம் வேளாண்மை அலுவலர் இரா.தாரா, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் இரா.தாட்சாயிணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த மறைமுக ஏலத்தில் வணிகர்கள் கலந்து கொண்டு நெல் ரகங்களுக்கு விலை நிர்ணயம் செய்தனர். மொத்தம் 4.500 மெட்ரிக். டன் நெல் ரகங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஏல பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு ரூ.2.65 லட்சம் ஆகும். மேலும் கருப்புகவுனி நெல் ரகம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.59-க்கும். மாப்பிள்ளை சம்பா கிலோ ரூ.35-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தங்களது நெல்ரகங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் வாரந்தோறும் நடைபெறும் இந்த மறைமுக ஏலத்தில் தங்களது பாரம்பரிய நெல்ரகங்களை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையுமாறு தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் மா. சரசு கேட்டுக் கொண்டுள்ளார்

Similar News