பாபாநாசம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கிரைம்;

Update: 2025-02-06 13:45 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே வீட்டில் இளைஞர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கபிஸ்தலம் அருகே தென்சருக்கை கீழத்தெருவைச் சேர்ந்தவரும், குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவருமான அஜய் (39) என்பவருக்கு பால்ராஜ் என்பவர் திருப்பூரில் அடைக்கலம் தந்தார். மேலும் அவரது மனைவியின் தங்கை சாந்தியை 2012-இல் திருமணம் செய்துவைத்தார். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அஜய் சாலை விபத்தில் காயமடைந்து படுத்த படுக்கையானார். இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கபிஸ்தலம் காவல்ஆய்வாளர் மகாலட்சுமி சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News