ஒன்றிய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சையில் நகல் எரிப்பு போராட்டம்

போராட்டம்;

Update: 2025-02-06 15:56 GMT
நாடாளுமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் விவசாயிகள் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது, குறைந்தபட்ச ஆதார விலை, தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டம் திரும்ப பெறுவது உள்ளிட்ட எவ்விதமான அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாக உள்ளது. மேலும் அன்றாட உழைக்கின்ற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாக்க விலைவாசி உயர்வு குறைப்பு இல்லை என்பதையும் கண்டித்து ஐக்கிய விவசாய முன்னணி பிப்ரவரி 5 ம் தேதி நாடு தழுவிய நகல் எரிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.  இந்த அழைப்பை ஏற்று ஐக்கிய விவசாயிகள் முன்னனி சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மாலை ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில்       மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தேவா, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம், விவசாய சங்க நிர்வாகி ஆர்.உதயகுமார் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர்    துரை.மதிவாணன்,  சிஐடி யு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் தியாகராஜன், மகஇக இராவணன்,    கரிகாலன், உழவர் உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் த.கிருஷ்ணன், விசிறி சாமியார் முருகன், சிபிஐ மாவட்டப் பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News