அரசு கலைக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரசு கலைக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2025-02-07 06:18 GMT
அரியலூர், பிப். 7 - அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாம் புதன்கிழமை நடைபெற்றது.முகாமை, அக்கல்லூரியின் முதல்வர்(பொ)பெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசினார். முகாமில் கலந்து கொண்ட சென்னையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் பங்குதாரர் சரவணன், மேலாளர் ராஜீவ்காந்தி  ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி, தங்களது நிறுவனத்துக்கு தகுதியான 230 மாணவிகளை தேர்ந்தெடுத்து, பணி அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் வெ.கருணாகரன் செய்திருந்தார்.

Similar News