ஊரகத்திறனாய்வு தேர்வினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற ஊரகத்திறனாய்வு தேர்வினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார்.;

Update: 2025-02-08 17:01 GMT
திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற ஊரகத்திறனாய்வு தேர்வினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார். 2024-2025ஆம் கல்வியாண்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊரகத்திறனாய்வு உதவித்தொகை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அதனடிப்படையில், இன்றைய தினம் (08.02.2025) திருவாரூர் மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு 2861 மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்தனர் அவர்களில் 2686 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News