சோதனை சாவடி அகற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிகள் நிறைவு 12 தற்காலிக சோதனைச் சாவடிகள் அகற்றம்;

Update: 2025-02-09 08:56 GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர், 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.இதேபோன்று, தொகுதியின் முக்கிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், மூலப்பட்டறை, பன்னீர்செல்வம் பார்க், வீரப்பன்சத்திரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர். மேலும், ஈரோடு மாநகரப் பகுதிகளான பி.பி.அக்ரஹாரம் பகுதி, சம்பத் நகர், எல்லை மாரியம்மன் கோவில், மூலப்பட்டறை நால்ரோடு, கொல்லம்பாளையம், வீரப்பம்பாளையம், சூளை, கருங்கல்பாளையம் காந்தி சிலை உள்பட 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு துணை ராணுவ படையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி நேற்று நிறைவடைந்ததை அடுத்து, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக சோதனைச் சாவடிகள் நேற்று மதியத்துடன் அகற்றப்பட்டன. ஆனாலும், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News