கால்நடை கண்காட்சி
2025ம் ஆண்டிற்காண பாரம்பரிய கால்நடை மற்றும் நாய்கள் கண்காட்சி;
ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தில் ஈரோடு நாட்டுமாடுகள் பாதுகாப்பு குழு மற்றும் ஆதிவனம் இணைந்து வழங்கும் 2025ம் ஆண்டிற்காண பாரம்பரிய கால்நடை மற்றும் நாய்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதில் 300 க்கும் மேற்பட்ட காளைகள், மாடுகளும் 200 க்கும் மேற்பட்ட நாட்டு இன நாய்களும் கலந்து கொண்டு உள்ளன.போட்டியில் பங்குபெற்ற காளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன... முன்ன இல்லதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் காங்கேயம் கால்நடைகாண காளைகள் மாடுகளை பொறுத்தவரையில் முன்னோர்கள் இடம் வரலாறு படைத்தது. இந்த கண்காட்சி என்பது வரலாறு படைத்த ஒன்றாக உள்ளது.குறிப்பாக இந்த கண்காட்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற பாரம்பரிய காளைகளையும் மாடுகளையும் மிக அரிதாக உள்ள கால கட்டத்தில் இது போன்று ஒரே இடத்தில் காண்பது காணக்கிடைக்காத காட்சியாக தான் உள்ளது