முதல்வருக்கு நன்றி
*மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனராக மீண்டும் மருந்தியல் படித்த அலுவலரை இயக்குனராக நியமனம் செய்ய உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு மருந்து விற்பனை சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்;
தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஈஸ்வரமூர்த்தி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே கே செல்வன் தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் எம் ஸ்ரீதர் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு குறித்து விளக்கிப் பேசினார் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இணை இயக்குனர் கார்த்திகேயன் துணை இயக்குனர் இளங்கோ மற்றும் உதவி இயக்குனர்கள் ராம் பிரபு மாரிமுத்து சதீஷ் அதியமான் குரு பார்வதி மற்றும் மருத்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பொருளாளர் என் ஆர் பி அன்பழகன் ஈரோடு மாவட்ட தலைவர் ஆர் துரைசாமி செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் வி முருகேசன் குத்தூஸ் ஜியாபுதீன் மெடிக்கல் சங்கரன் புருஷோத்தமன் காளியண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்