ரயில்வே பாதுகாப்பு

கர்ப்பிணியை ரெயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவத்தை தொடர்ந்து ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. பெண்கள் பெட்டியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-02-10 11:17 GMT
திருப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணியை வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதையடுத்து ரெயில்களில் பெண்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்த நிலையில் ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நடைமேடைகள், பயணிகள் ஓய்வறை, டிக்கெட் எடுக்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக யாராவது இருந்தால், அவரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ரெயில்களின் பெண்கள் பெட்டிகளில் போலீசார் ஏறி சென்று பார்வையிட்டனர். அப்போது, ரெயில் புறப்பட்டதும் பெண்கள் பெட்டியின் கதவை மூடிவிட வேண்டும் என்றும், அடுத்த ரெயில் நிலையம் வரும்போது பயணிகள் ஏற அல்லது இறங்க வேண்டி இருந்தால் மட்டுமே கதவை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், தெரியாத நபர்கள் உணவு பொருட்களை கொடுத்தால் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். அவசர காலத்துக்கு 1512, 139 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று பயணிகளுக்கு ஆலோசனை வழங்கிய போலீசார், ரெயில் பெட்டிகளில் பயணிகளின் பார்வைக்காக தொலைபேசி எண் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்

Similar News