தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களின் பெயர், சின்னம் பொருத்த பயன்படும் கருவி தேர்தல் ஆணைய கிடங்கில் ஒப்படைப்பு;

Update: 2025-02-10 12:41 GMT
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில், தி.மு.க வேட்பாளர் சந்திரகுமாரை எதிர்த்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 45 பேர் போட்டியிட்டனர்.இதையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு அருகே சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. 14 மேஜைகளில், 17 சுற்றுகளில் இந்த வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின்போது 3 எந்திரங்களில் பேட்டரி பழுதானதையடுத்து, அந்த சந்திரங்களின் வி.வி.பேட் கருவிகளை கொண்டு அந்த 3 எந்திரங்களிலும் பதிவான வாக்குகள் இறுதியாக எண்ணப்பட்டன. இதையடுத்து, அந்த எண்ணிக்கை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுற்றாக கணக்கிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 20 சுற்றுகள் எண்ணப்பட்டன.இந்த தேர்தலில், தொகுதியில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்திருந்தனர் (67.97 சதவீதம்).இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1 லட்சத்து 15 ஆயிரத்து 709 வாக்குகளும், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24 ஆயிரத்து 151 வாக்குகளும் பெற்றிருந்தனர்.நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் பதிவாகி இருந்தன.இதில், சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீ காந்த வேட்பாளர் சந்திரகுமாருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.இதையடுத்து, வாக்குப் பதிவு எந்திரங்கள் மீண்டும் பெட்டிகளில் வைத்து பூட்டப்பட்டு இன்று காலை முதல், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் கிடங்கில் கொண்டு சேர்க்கும் பணி நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த, வாக்கு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர் சின்னம் பொருத்தும் பணிக்குத் பயன்படுத்தப்படும் ’சிம்பல் லோடிங் யூனிட்’ எனப்படும் கருவி (சிப்) நேற்று இரவு, மாவட்டத் தேர்தல் அலுவலரால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் ஆணையக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Similar News