விவசாயிகளுக்கு பிரத்தேக குறியீட்டு எண் வழங்கும் சிறப்பு முகாம்.

மத்திய, மாநில விவசாய திட்டங்கள் குறித்து பயன்பெற ஒவ்வொரு விவசாயிகளிடமும் பிரத்யேகமாக குறியீட்டு எண் வழங்கும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் 555 வருவாய் கிராமங்களிலும் 10.02.2025 முதல் 14.02.2025 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது..;

Update: 2025-02-10 16:40 GMT
இன்றைய தினம் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட கூடூர் ஊராட்சியிலுள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் நிகழ்ச்சியினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்கள். விவசாயிகள் ஆதார் எண் மற்றும் நில ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு விவசாயிகள் தனி விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து மின்னணு கையொப்பம் பெறப்பட்டு விவசாயிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டப்பின் விவசாயிகளுக்கு தனி குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. அனைத்து துறை திட்டங்களுக்கும் இந்த பிரத்யேகமான குறியீட்டு எண்ணினை பயன்படுத்தி கொள்ளலாம்.

Similar News