குறைதீர்க்கும் கூட்டம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள்: 100க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கிச் சென்ற பொதுமக்கள்;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மதியம் வரை அமலில் இருந்தன. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்றும் நடைபெறவில்லை. இருப்பினும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் வகையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் சென்றனர். அதில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 100க்கும் மேற்பட்டோர் தங்களது மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர். இதில், சுமார் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.