கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி

ஈரோடு கலைக் கல்லூரியில் நடந்த போட்டிகளில் வேளாளர் கலைக் கல்லூரிக்கு சாம்பியன் கோப்பை;

Update: 2025-02-11 17:03 GMT
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றுள்ளது. ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தல், விளக்கக்காட்சிப் படம், சந்தைப்படுத்தல், வலை வடிவமைப்பு, குறும்படம், விநாடி வினா, புகைப்படம் எடுத்தல், தனிநடனம் மற்றும் குழு நடனம் உள்ளிட்ட பல்வேறுபோட்டிகளில் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர் போட்டிகளின் நிறைவில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, தி முதலியார் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் தலைவர் எ. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் மு.மு.பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார். கணினித்துறை தலைவர் ரிஸ்வானர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சு.சங்கரசுப்பிரமணியன் மற்றும் இயக்குநர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். எஸ். எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் சங்கரராமன் சிறப்புரை நிகழ்த்தினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பெற்றனர். கணினித் துறைத்தலைவர் ம.மேனகர் நன்றி கூறினார்.

Similar News