துணை ராணுவம்

ஈரோட்டில் இருந்து புறப்பட்ட துணை ராணுவம்;

Update: 2025-02-11 17:05 GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக கொச்சின், நெய்வேலி மற்றும் ஹைதராபாத்தில் இருந்து தலா ஒரு கம்பெனி என மொத்தம் 240 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் (துணை ராணுவம்) ஈரோடு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 5ம் தேதி, தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் 160 வீரர்கள் ஈரோட்டில் இருந்து கிளம்பி சென்றனர். வாக்கு எண்ணும் மைய பாதுகாப்புக்காக 80 வீரர்கள் மட்டும் தங்கி இருந்தனர். வாக்கு எண்ணும் பணி நிறைவு பெற்ற நிலையில், நேற்று முன் தினம் இரவு துணை ராணுவ வீரர்கள் ஹைதராபாத் கிளம்பி சென்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த பட்டாலியன் போலீசார், 160 பேர் மட்டும் ஈரோட்டில் தங்கி உள்ளனர். இவர்கள் கிளம்பி செல்வதற்கான உத்தரவு கிடைக்க பெறவில்லை. எனவே, ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் தங்கி இருக்க உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News