வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் முன்னிலை வகித்தனர்.முகாமில் ரேஷன் கார்டில் மொபைல் போன் எண் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம், புதிதாக பெயர் சேர்த்தல், குடும்ப தலைவர் மாற்றம், பெயர் மற்றும் பிறந்த தேதி திருத்தம், நகல் அட்டை தொடர்பாக, 56 மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீர்வு காணப்பட்டது.