ஆலங்குளத்தில் எரியாத மின் விளக்குகளை சரிசெய்ய கோரிக்கை
எரியாத மின் விளக்குகளை சரிசெய்ய கோரிக்கை;
தென்காசி மாவட்டம் தென்காசி இருந்து திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் சாலையின் நடுவே முக்கிய நகரங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பல இடங்களில் கோபுர மின் விளக்கு எரிய விடப்பட்டுள்ளது. அவ்வாறு எரியவிடப்பட்டுள்ள கோபுர விளக்குகளில் ஆலங்குளம் பேருந்து நிலையத்திற்கு கீழ்புறம் சில விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் முழுவதும் இரண்டு சூழ்ந்து காணப்பட்டு அந்தப் பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனை உடனே கூப்பிட மின்விளக்குகளை சரிசெய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.