அறுவை சிகிச்சை அரங்கம்
அரசு மருத்துவமனைக்கு ரூ 7.33 லட்சத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் வழங்கிய எஸ் கே எம் நிறுவனத்தினர்;
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்க ரூ 7.33 லட்சம்; நஞ்சை ஊத்துக்குளி எஸ் கே எம் நிறுவனத்தினர் வழங்கினர்.ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை யில் மாதம் தோறும் மகப்பேறு மருத்துவம், கர்ப்பப்பை அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை , சர்க்கரை நோய் கால் புண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சுமார் 600 முதல் 700 அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி எஸ் கே எம் நிறுவனத்தினர் பல்நோக்கு உயர் அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்க ரூ.7.3 3 லட்சம் மதிப்பில் நிதி உதவியை எஸ் கே எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், செயல் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணா ஆகியோர் வழங்கினர.நஞ்சை ஊத்துக்குளியில் நடைபெற்ற விழாவில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா, தலைமை மயக்கவியல் மருத்துவர் pகதிரவன் மயக்கவியல் மருத்துவர் என் .இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர். புடம் உண்டு நஞ்சை ஊத்துக்குளி எஸ்கேஎம் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பல்நோக்கு உயர் அறுவை சிகிச்கை அரங்கம் அமைய ரூ.7.73லட்சம் மதிப்பிலான உதவியை வழங்கும் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், செயல் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணா ஆகியோர் உடன் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள்.