பொது மக்கள் அச்சம்
கடம்பூர் மலை கிராமத்தில் ஆட்கொல்லி யானை முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம்;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூரை அடுத்துள்ள உகினியம் மலை கிராமத்தில் கடந்த மாதம் 16-ந் தேவி இரவு தோட்டத்தில் காவலில் ஈடுபட்டிருந்த விவசாயி ராஜப்பனை வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒற்றை யானை தாக்கி கொன்றது. இந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அவ்வப்போது உகினியம் மலை கிராமத்துக்குள் நடமாடி வருகிறது. இரவு ஆனதும் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் இந்த ஆட்கொல்லி யானை உக்னியம் கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. சத்தியமங்கலம் வனச்சரக பணியாளர்கள் உகினியம் பகுதியில் வந்த போது ஆசனூர் வனச்சரக எல்லையில் யானை நடமாடியது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை அந்த ஆட்கொல்லி யானை விரட்டுகிறது. இதுகுறித்து உகினியம் மலை கிராம மக்கள் கூறும்போது,கடந்த சில நாட்களாக ஒற்றை யானை எங்கள் கிராமத்தை சுற்றி வருகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வரும் எங்கள் மலை கிராம மக்களை அந்த ஒற்றை யானை துரத்துகிறது. இதனால் எங்கள் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். தனியாக நடமாடவே அச்சப்படுகின்றனர். வனத்துறையினர் இந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.