வரத்து அதிகரிப்பு
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது கிலோ ரூ.10-15-க்கு விற்பனை;
ஈரோடு வ உ சி காய்கறி மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், தாளவாடி, ஆந்திரா குப்பம், கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளி விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் 40 வரை தரத்திற்கு தகுந்தது போல் விற்பனையானது. இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தாளவாடி, ஆந்திரா குப்பம், கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்து இன்று மட்டும் 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வரத்து அதிகரிப்பதன் காரணமாக தக்காளி விலையும் கடந்த வாரத்தை விட இன்று குறைந்தது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.10, 15, 20 என தரத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்று தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து கூடுதலாக தக்காளிகளை கிலோ கணக்கில் வாங்கி சென்றனர்.