மூதாட்டி தற்கொலை

அந்தியூர் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை;

Update: 2025-02-16 15:48 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுக்காட்டைச் சேர்ந்தவர் ஐயம்மாள் ( 60). இவருக்கு அடிக்கடி உடல் வலி பிரச்சனை இருந்ததால், சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனால், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த அவர், 13-ம் தேதி விஷ மூலிகையை அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பின்னர் வீட்டில் மயக்க நிலையில் இருந்த அவரை மீட்ட, உறவினர்கள், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஐயம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News