விழுப்புரத்தில் நூதன முறையில் மதுப் புட்டிகளை கடத்தியவா் கைது
நூதன முறையில் மதுப் புட்டிகளை கடத்தியவா் கைது;
விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் தனிப் படை உதவி ஆய்வாளா்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலா்கள் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது, சந்தேகத்துக்குரிய முறையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். பின்னா், அவரை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனா்.அவரது உடலில் புதுவை மாநில மதுப் புட்டிகளை டேப்புகளை கொண்டு ஒட்டி மறைத்துக் கொண்டு, பேருந்தில் விழுப்புரத்துக்கு எடுத்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவா் விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த பாவாடை மகன் நாகமணி (40) எனத் தெரிய வந்தது.90 மில்லி அளவு கொண்ட 100 மதுப் புட்டிகளும், 150 மில்லி அளவு கொண்ட 20 மதுப் புட்டிகளும் பறிமுதல் செயப்பட்டன. இதைத் தொடா்ந்து, நாகமணியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.