கிராமப் பகுதியை நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

திருவாரூர் நகராட்சியுடன் கிராமப் பகுதியை இணைப்பதை கண்டித்து கீழக்காவாது குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-02-17 18:59 GMT
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்காவாது குடி ஊராட்சியை திருவாரூர் நகராட்சி உடன் இணைப்பதாக கூறி அரசு அறிவிப்பு வெளியிட்டது இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாது குடி ஊராட்சியை இணைப்பதால் பொதுமக்கள் பல்வேறு வரி சுமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாது குடி ஊராட்சியை இணைப்பதை கண்டித்து தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கீழக்காவாது குடி ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News