கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.;
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வார இறுதி நாட்களில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை தடை செய்யப்பட்ட குட்கா கஞ்சா பான் மசாலா கூலிப் மற்றும் மணல் கடத்தல் லாட்டரி விற்பனை மற்றும் பணத்தை வைத்து சூதாடுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.