தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் பேட்டி..
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் தமிழ்நாடு சட்டத்தின் கீழ் தான் செயல்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் பேட்டி.;
திருவாரூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயனாளிகளுக்கு கல்வி திருமணம், இயற்கை மரணம், ஓய்வூதியம், வீட்டு வசதி திட்டம், விபத்து ஊனம் உள்ளிட்ட 54 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொன் குமார் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாரிய தலைவர் பொன் குமார் தெரிவித்த போது... ஒன்றிய அரசு 44 சட்டங்களை 4 கோடுகளாக்கி, வெள்ளைக்காரன் காலத்தில் தொழிலாளிகளுக்கு கொடுத்து வந்த உரிமைகளை பறித்து அதை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள வாரியங்களை ஒன்று திரட்டி அதிலுள்ள நிதிகளை மத்தியஅரசிடம் கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ரூ.7 ஆயிரம் கோடி தொழிலாளர்களுக்கான நிதி இருக்கிறது. இதை ஒன்றிய அரசு அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை எந்த காலத்திலும் அனுமதிக்க மாட்டோம். இந்த வாரியமும், சட்டமும் தமிழ்நாடு சட்டத்தின் கீழ் தான் செயல்படும் என உறுதிபட முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக கோடிக்கணக்கான அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் சார்பாக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வாரியத்தை முடக்குகிற பணியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என தெரிவித்தார்.