அரசின் சாதனை விளக்கக் புகைப்படக் கண்காட்சி.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், கீழமணலி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும்வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது..;

Update: 2025-02-18 18:12 GMT
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், கீழமணலி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும்வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.. இப்புகைப்படக்கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரளால் துவக்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கோவில் பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம், புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இப்புகைப்படக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Similar News