சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரகலை நிகழ்ச்சி...*

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரகலை நிகழ்ச்சி...*;

Update: 2025-02-19 13:47 GMT
விருதுநகரில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரகலை நிகழ்ச்சி... தமிழக அரசால் பிளாஸ்டிக்உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனையொட்டி இன்று மத்திய சுற்றுச்சூழல் வரும் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் வழிகாட்டுதலின்படி .தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை சார்பாக சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந் ஜோசன் தலைமையில், இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையதில் வைத்து பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்சிகள் மூலமாக பொதுமக்கள் வாங்கி உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பைகளை உபயோகித்து விட்டு தரையில் வீசுவதால் அந்த பிளாஸ்டிக் பொருள்களை கால்நடைகளான பசு, நாய், உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுடன் உட்கொள்ளும் போது உணவுக்குழாயில் சிக்கி மரணம் அடைவதாகவும், மேலும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் குடிநீர்,குளிர்பானத்தை உபயோகித்து விட்டு கீழே போடும் பொழுது அது எக் காலத்திலும் அழியாது எனவும், மேலும் சாக்கடை, மற்றும் கழிவுநீரில் கலந்து அந்த நீர் கடலுக்குள் செல்லும் பொழுது அந்த பிளாஸ்டிக் பொருள்களை உட் கொள்ளும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அழிவதாகவும், மேலும் பிளாஸ்டிக்கில் பேக்கேஜ் செய்து வரும் உணவுப் பொருள்களை பொதுமக்கள் வாங்கி உட்கொள்வதால் அவர்களுக்கு புற்று நோய் வர வாய்ப்பு அதிகம் இருபதாகவும், பிளாஸ்டிக் பொருள்கள் காற்று, நீர் மற்றும் நிலத்தில் மாசுபாட்டை ஏற்படுத்துகின்ற என்றும் இதனால் பொதுமக்கள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும்அங்கிருந்த பொதுமக்களுக்கு கலைநிகழ்சிகள் மூலமாக எளிதாக புரியும் படி எடுத்துரைத்தனர் மேலும் இந்த நிகழ்சியின் முடிவில் மதுரை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒரு ங்கிணைப்பாளர் குழந்தைவேல் அங்கிருந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும், துணிப்பைகளையும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

Similar News