நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..
திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.;
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்ட தினமான பிப்ரவரி 19ஆம் தேதியை நீதித்துறைக்கு ஏற்பட்ட கருப்பு தினமாக, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஜாக் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டதை வழக்கறிஞர்கள் கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் , இதன்படி திருவாரூர்மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு திருவாரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட தினத்தை நீதித்துறைக்கு ஏற்பட்ட கருப்பு தினமாக கடைப்பிடித்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் , மேலும் கோரிக்கைகளாக - மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் , தமிழகஅரசு வழக்கறிஞர் சேமநல நிதி முத்திரைத்தாள் கட்டணத்தை ரூ.30லிருந்து ரூ.120ஆக உயர்த்தியதை திரும்பபெற கோரியும், வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.10,00,000/- லிருந்து ரூ.25,00,000/-ஆக உயர்த்தி வழங்கவேண்டும் , புதிய வழக்கறிஞர்களின் சட்டதிருத்த மசோதாவை உடனடியாக மத்தியஅரசு திரும்ப பெறவேண்டும் , புதிய வழக்கறிஞர்களின் சட்ட திருத்த மசோதாவை மத்தியஅரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி கோஷமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் , இதில் திருவாரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் , செயலாளர் ராஜ்கமல், பொருளாளர் செல்வகுமார் உட்பட 120க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ,