போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.;
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழகத்திற்கு அடிமையாக கூடாது. குடும்பத்தினர், நண்பர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். அதேபோன்று, போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிபடுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். முன்னதாக, போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள். இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல்; கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இப்பேரணியானது, நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நன்னிலம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்ததது. தொடர்ந்து, னுசுருபு கசநந வுN யிp குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் வெளியிட்டார். இந்நிகழ்வில், துணை ஆட்சியர் (கலால்), மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு) நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல்; கல்லூரி முதல்வர், நன்னிலம் வட்டாட்சியர், நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.